Crime

சென்னை: அஜர்​பைஜான் நாட்​டில் வேலை வாங்​கித் தரு​வ​தாக, பண மோசடி​யில் ஈடு​பட்ட இளைஞர் கைது செய்​யப்​பட்​டார். திண்டுக்​கல் மாவட்​டத்​தைச் சேர்ந்​தவர் குரு​மூர்த்தி (30). இவர், வெளிநாட்​டில் பணி செய்ய வேலை தேடிக் கொண்​டிருந்​தார். அப்​போது, வெளி​நாட்டு வேலை தொடர்​பாக, சமூக வலை​தளத்​தில் வந்த விளம்​பரம் ஒன்றை பார்த்​து, அதில் குறிப்​பிடப்​பட்​டிருந்த செல்​போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசி​னார்.

போலி விசா, பணியாணை எதிர் முனை​யில் பேசிய நபர், தான் தூத்​துக்​குடி மாவட்​டம், எட்​டையபுரத்​தைச் சேர்ந்த சுடலை குமார் (38) என்​றும், தன்​னால் அஜர்​பைஜான் நாட்​டில் வேலை வாங்​கித் தர முடி​யும் எனவும் கூறி, சேவை கட்​ட​ண​மாக ரூ.1.5 லட்​சம் பெற்​றுக் கொண்​டார். இதையடுத்​து, அந்​நாட்​டுக்​குச் செல்ல தேவை​யான விசா மற்​றும் வேலைக்​கான ஆணை​களை கொடுத்​துள்​ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/sLCTcrj

Post a Comment

0 Comments