
சென்னை: சென்னையில் உள்ள குடியரசு துணைத் தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு 2-வது முறையாக மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். பாமக நிறுவனர் ராமதாஸின் தைலாபுரம் வீடு, சென்னையில் உள்ள பாமக அலுவலகம் ஆகிய இடங்களுக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டது.
முதல்வர், அமைச்சர்கள், கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், நடிகர், நடிகைகள் வீடு, ஆளுநர் மாளிகை, விமான நிலையம், வெளிநாட்டு தூதரகங்கள் என பல்வேறு இடங்களுக்கு அண்மைக்காலமாக தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. போலீஸார் நடத்தும் சோதனைகளில் மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/pQxaYWc
0 Comments