Crime

சென்னை: அரும்​பாக்​கத்​தைச் சேர்ந்த பட்​ட​தாரி சேத்​தன் (25). இவர் கிரிப்டோ கரன்சி வாங்க திட்​ட​மிட்​டிருந்​தார். அப்​போது, சேலத்தை சேர்ந்த சக்தி என்​பவரது அறி​முகம் டெலிகி​ராம் மூலம் கிடைத்​தது. அவர் கிரிப்டோ கரன்​சி​யில் முதலீடு செய்​தால் அதிக லாபம் கிடைக்​கும் எனவும், தன்​னிடம் கிரிப்டோ கரன்சி விற்​பனைக்​காக உள்​ளது எனவும் தெரி​வித்​துள்​ளார்.

இந்த தகவலை சேத்​தன் தனது நண்​பர்​கள் வேலப்​பன்​சாவடியைச் சேர்ந்த எல்​ஐசி முகவர் லாரன்​ஸ், மும்​பையைச் சேர்ந்த செந்​தில் குமார் மற்​றும் பெங்​களூரு​வைச் சேர்ந்த கிரண்​கு​மார் ஆகியோரிடம் தெரிவிக்க, அவர்​களும் கிரிப்டோ கரன்சி வாங்க முடிவு செய்​துள்​ளனர். இதையடுத்​து, சக்தி கொடுத்த வங்கி கணக்​குக்கு 3 பேரும் சேர்ந்து ரூ.26.55 லட்​சத்தை அனுப்பி வைத்​துள்​ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/FnpbCe6

Post a Comment

0 Comments