Crime

சென்னை: கடத்தல் கும்​பல்​களிட​மிருந்து பறி​முதல் செய்​யப்​பட்ட, ரூ.5 கோடி மதிப்​புள்ள போதைப் பொருட்​கள் தீயி​லிட்டு அழிக்கப்பட்​டது. தமிழகம் முழு​வதும் போதைப் பொருள் கடத்​தல், பதுக்​கல் மற்​றும் விற்​பனையை தடுக்​கும் வகை​யில், அமலாக்கப் பணி​யகம் சிஐடி என்​னும் போதைப் பொருள் நுண்​ணறிவு பிரிவு போலீ​ஸார் தீவிர கண்​காணிப்​பில் ஈடு​பட்​டுள்​ளனர்.

இப்​பிரிவு போலீ​ஸா​ரால் 428 வழக்​கு​களில் கைப்​பற்​றப்​பட்ட 4,727 கிலோ கஞ்​சா, 0.72 கி.கி​ராம் ஹெரா​யின் உள்பட மொத்​தம் ரூ.5 கோடி மதிப்​பிலான போதைப் பொருளை, அப்​பிரிவு ஐ.ஜி செந்​தில் குமாரி தலை​மையி​லான போலீ​ஸார் செங்​கல்​பட்​டில் உள்ள தென்​மேல்​பாக்​கம் பகு​தி​யில் தீயி​லிட்டு நேற்று அழித்​தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/j1TqJEI

Post a Comment

0 Comments