Crime

விருத்தாசலம்: கடலூர் மாவட்​டம் வேப்​பூர் பகு​தி​யில் உள்ள ஒரு ஆசிரியர் கல்​வி​யி​யில் கல்​லூரி​யில் பயிலும் மணி​கண்​டன் என் பவர், வேப்​பூரில் உள்ள அரசுப் பள்​ளிக்கு 3 மாத பயிற்​சிக்​காக சென்​றார். நேற்று முன்​தினம் பள்​ளி​யில் பிளஸ் 1 மாணவர்​களுக்கு நடத்​தப்​பட்ட காலாண்​டுத் தேர்வை கண்​காணிக்​கும் பணி​யில் மணி​கண்​டன் ஈடு​பட்​டார்.

அப்​போது அதே பள்​ளி​யில் படிக்​கும் பிளஸ் 2 மாணவர்​கள் 5 பேர், தேர்வு நடை​பெறும் அறைக் கதவைத் தட்​டி, மறு​நாள் நடை​பெற இருக்​கும் கணித தேர்​வுக்​கான வினாத்​தாளை முன்​னரே தரு​மாறு கேட்​டுள்​ளனர். ஆனால், அறைக்​கதவை மணி​கண்​டன் திறக்க மறுத்த நிலை​யில், கதவை உடைத்​துக் கொண்டு உள்ளே சென்ற மாணவர்​கள், பயிற்சி ஆசிரியரைத் தாக்​கி​யுள்​ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Vaq4nC3

Post a Comment

0 Comments