Crime

சென்னை: சென்னையில் பிடிபட்ட பிஹார் இளைஞர் பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் தங்கியிருந்து வேலை செய்து வந்த பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த அஹ்லத்தூர் முகமது அக்லிக் முஜாஹித் (22) என்பவரை கடந்த ஜூன் மாதம் உள்ளூர் போலீஸாரும், தமிழக தீவிரவாத தடுப்புப்படையினரும் தங்களுக்கு ரகசியத் தகவலின் பேரில் கைது செய்து விசாரணை செய்தனர்.

இதில், அவர் சமூக ஊடகங்கள் மூலம் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸார் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், இந்த வழக்கின் விசாரணை தேச பாதுகாப்பு கருதியும், முக்கியத்துவம் கருதியும் தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டு வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/AsC6rzV

Post a Comment

0 Comments