Crime

சென்னை: கன்​னி​யாகுமரி மாவட்​டத்தை சேர்ந்​தவர் ரோஸ்​மேரி (45). இவர் கடந்த 2022-ம் ஆண்டு தனது மகளை மருத்​து​வக்​ கல்லுரி​யில் எம்​பிபிஎஸ் படிப்​பில் சேர்க்க முயற்சி மேற்​கொண்​டார். அப்​போது, அவருக்கு சென்னை சோழிங்​க நல்​லூரைச் சேர்ந்த ரம்யா (37) என்​பவரது அறி​முகம் கிடைத்​தது. அவரிடம் ரம்யா தான் சுகா​தா​ரத் துறை​யில் அதி​காரி​யாக இருப்​ப​தாக கூறி இருக்கிறார்.

மேலும், தான் நினைத்​தால் எம்​பிபிஎஸ் சீட் பெற்​றுக் கொடுக்க முடி​யும் என தெரி​வித்​துள்​ளார். இதை உண்மை என நம்​பிய ரோஸ்​மேரி, பல்​வேறு தவணை​களாக ரூ.60 லட்​சம் கொடுத்​துள்​ளார். சென்​னை, தேனாம்​பேட்​டை​யில் உள்ள டிஎம்​எஸ் அலு​வல​கத்​தில் வைத்து இந்த பணத்தை ரம்யா வாங்கி உள்​ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/dwzmrT4

Post a Comment

0 Comments