Crime

சென்னை: தந்தை கொலைக்கு 17 ஆண்​டு​கள் காத்​திருந்து கல்​லூரி மாணவ​னான மகன் பழி தீர்த்​துள்​ளார். இக்​கொலை தொடர்பாக 3 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். சென்னை டி.பி சத்​திரம் ஜோதி​யம்​மாள் நகரைச் சேர்ந்​தவர் புல்​கான் என்ற ராஜ்குமார் (42). இவருக்கு மனை​வி​யும், 2 பிள்​ளை​களும் உள்​ளனர். சுப மற்​றும் துக்க நிகழ்​வு​களுக்கு ஷாமி​யானா பந்​தல் அமைத்துக் கொடுக்​கும் தொழில் செய்து வந்​தார். ‘பி’ வகைப்​படுத்​தப்​பட்ட ரவுடி​யான இவர் மீது ஒரு கொலை உட்பட 9 குற்ற வழக்​கு​கள் உள்​ளன.

இவர் நேற்று முன்​தினம் மதி​யம் வீட்​டில் இருந்​த​போது கொலை கும்​பலால் வெட்​டிக் கொலை செய்​யப்​பட்​டார். இந்த கொலை தொடர்​பாக டி.பி.சத்​திரம் போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்து வரு​கின்​றனர். இதில், பரபரப்பு தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. சென்​னை​யில் 50 ஆண்​டு​களாக கஞ்சா வியா​பாரத்​தில் கொடிகட்​டிப் பறந்த பெண் தாதா கிருஷ்ணவேனி​யின் வளர்ப்பு மகன் எனக் கூறப்​படும் செந்​திலை கடந்த 2008-ல் கும்​பல் ஒன்று கொலை செய்​தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/dt7fWuL

Post a Comment

0 Comments