Crime

கும்பகோணம்: திரு​விடைமருதூர் டிஎஸ்பி தாக்​கிய​தில் காதுகள் பாதிக்​கப்​பட்ட திமுக நிர்​வாகி, விஷம் குடித்து தற்​கொலைக்கு முயன்​ற​தால் பரபரப்பு ஏற்​பட்​டுள்​ளது. கும்​பகோணம் வட்​டம் சிவபுரம் வடக்​குத் தெரு​வைச் சேர்ந்​தவர் குமர​வேலு(40). கட்​டிட ஒப்​பந்​த​தா​ர​ரான இவர், திமுக மாவட்ட விவ​சாய அணி துணை அமைப்​பாள​ராக​வும் உள்​ளார். அங்​குள்ள மாரி​யம்​மன் கோயில் தேர் நிறுத்​தும் இடத்​தில், அதே பகு​தி​யைச் சேர்ந்த ஒரு​வர் வீடு கட்டி வந்​தார்.

அதற்கு குமர​வேலு உள்​ளிட்​டோர் எதிர்ப்பு தெரி​வித்​து, பணியை தடுத்து நிறுத்​தினர். மேலும், நாச்​சி​யார்​கோ​வில் காவல் நிலையத்​தி​லும் புகார் அளித்​தனர். இதையடுத்​து, வீடு கட்​டும் நபர் திரு​விடைமருதூர் டிஎஸ்பி ராஜு​விடம் இந்​தப் பிரச்​சினை குறித்து தெரி​வித்​துள்​ளார். பின்னர், கடந்த 3-ம் தேதி வீடு கட்​டும் பணியை மீண்​டும் தொடங்​கி​னார். அதை குமர​வேலு செல்​போனில் வீடியோ எடுத்​துள்​ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/hwAgKTr

Post a Comment

0 Comments