Crime

சென்னை: சென்னை வியாசர்​பாடி, பி.பி. சாலை பகு​தி​யில் வசிப்​பவர் ரபேல் (63). வீட்​டின் அரு​கில் கார் பழுது பார்க்​கும் ‘ஒர்க் ஷாப்’ நடத்தி வரு​கிறார். கடந்த 10 நாட்​களுக்கு முன்பு ராணி (60) என்​பவர் அவரது காரை பழுது பார்க்க ரபேலின் பணிமனை​யில் விட்​டுச் சென்​றார். அந்த காரை கடை​யின் எதிரே உள்ள சாலை​யோரத்​தில் ரபேல் நிறுத்தி வைத்​திருந்​தார்.

இந்​நிலை​யில், கடந்த 1-ம் தேதி அந்த காரை யாரோ திருடிச் சென்​று​விட்​டனர். அதிர்ச்சி அடைந்த ரபேல் இது தொடர்​பாக வியாசர்பாடி காவல் நிலை​யத்​தில் புகார் தெரி​வித்​தார். அதன்​படி, போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர். இதில் காரை திருடிச் சென்​றது கடலூர் மாவட்​டம், பேப்​பூர் தாலு​காவைச் சேர்ந்த அரவிந்த் (20) என்​பது தெரிந்​தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்​தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/TCIJWBe

Post a Comment

0 Comments