Crime

கோவை: கோவை​யில் வசிக்​கும் பால​முரு​கன், முரு​கப்​பெரு​மாள் ஆகியோர் கடந்த சில தினங்​களுக்கு முன் செட்​டிப்​பாளை​யம் காவல்​நிலை​யத்​துக்கு சென்​று, கடந்த 2 மாதங்​களுக்கு முன்பு தாங்​கள் ஒரு​வரை கொன்று கிணற்றில் வீசியதாக கூறி சரண் அடைந்​தனர். இதைத்​தொடர்ந்​து, போலீஸார் கிணற்​றில் இருந்து அழுகிய நிலை​யில் இளைஞர் சடலத்தை மீட்டு இரு​வரை​யும் கைது செய்து விசா​ரணை மேற்​கொண்​டனர்.

இதுகுறித்து போலீ​ஸார் கூறிய​தாவது: திருநெல்​வேலி மாவட்​டத்​தைச் சேர்ந்த நண்பர்கள் நியூட்​டன்​(28), பெனிட்​டோ(27) சென்னை அண்ணா நகரில் தங்​கி பணி​யாற்றி வந்​தனர். பின்னர் அங்கு வந்த மற்றொரு நண்பரான ஜெய​ராமனுக்கு​(24) வேலை வாய்ப்புக்காக நியூட்​டன் ஓர் ஆட்​டோவை ஏற்​பாடு செய்து கொடுத்​துள்​ளார். ஆனால், ஜெய​ராமன் அதை முறை​யாக ஓட்​டா​மல் மது குடித்து சுற்​றித்​திரிந்​துள்​ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/5feuPjD

Post a Comment

0 Comments