
சென்னை, ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளராக (எஸ்எஸ்ஐ) பணியாற்றியவர் ராஜாராமன் (54). இவர், கடந்த 18-ம்தேதி எழும்பூரில் உள்ள வணிக வளாகத்தில் உள்ள தனியார் மதுபான பாரில் மது அருந்தி விட்டு, வணிக வளாகம் முன்பு நின்றுக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு அவருக்கு ஏற்கனவே அறிமுகமான நீலாங்கரையைச் சேர்ந்த ராகேஷ் (30), கண்ணகி நகரை சேர்ந்த ஐயப்பா (36) உள்பட 4 பேர் அங்கு வந்தனர்.
வட்டிக்கு பணம் கொடுக்கும் ரகேஷிடம், ராஜாராமன் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது, அவர்களிடையே வாய் தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியுள்ளது. இதில், ராகேஷ் உள்பட 4 பேரும் சேர்ந்து ராஜாராமனை கடுமை தாக்கி கீழே பிடித்து தள்ளி விட்டனர். இதில், மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு கோமாவில் இருந்த ராஜாராமன் கடந்த மாதம் 25-ம் தேதி உயிரிழந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ofNWseH
0 Comments