Crime

சென்னை: ​போதைப்​பொருள் வழக்​கில் கைது செய்​யாமல் இருக்க நடிகர், நடிகை​களிடம் சுமார் ரூ.50 லட்​சம் லஞ்​சம் பெற்ற குற்றச்​சாட்​டில் காவல் ஆய்​வாளர், 2 எஸ்​.ஐ.க்​கள் காத்​திருப்​போர் பட்​டியலுக்கு மாற்​றப்​பட்​டுள்​ளனர். பணம் கொடுத்த சினிமா பிரபலங்​கள் யார் என விசா​ரணை முடுக்கி விடப்​பட்​டுள்​ளது.

சென்னை நுங்​கம்​பாக்​கத்​தில் கடந்த மே 22-ம் தேதி நடந்த மோதல் தொடர்​பாக கைதான அதி​முக முன்​னாள் பிர​முகர் பிரசாத் போதைப் பொருள் கடத்​தல் வழக்​கில் கைதான சேலம் சங்​ககிரி பிரதீப்​கு​மார் என்ற பிரடோ, கானா நாட்​டைச் சேர்ந்த ஜான் என்​பவருடன் தொடர்​பில் இருந்​தது தெரிய​வந்​தது. இதையடுத்​து, போதைப் பொருள் வழக்​கிலும் பிர​சாத் கைது செய்​யப்​பட்​டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/gjeGqzc

Post a Comment

0 Comments