Crime

நாமக்கல்: பள்​ளி​பாளை​யம் கிட்னி விற்​பனை விவ​காரம் தொடர்​பாக திருச்​செங்​கோட்​டில் சுகா​தா​ரத் துறை அதிகாரி​கள் ஆய்வு மேற்​கொண்​டனர். நாமக்​கல் மாவட்​டம் பள்​ளி​பாளை​யம், குமார​பாளை​யத்​தில் தொழிலா​ளர்​களின் கிட்​னியை இடைத்​தரகர்​கள் மூலம் விற்​பனை செய்​வ​தாக குற்​றச்​சாட்​டு​கள் கிளம்​பின. அண்​மை​யில், பள்​ளி​பாளை​யத்​தைச் சேர்ந்த பெண், தனது கிட்​னியை பள்​ளி​பாளை​யம் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த ஆனந்​தன் என்ற இடைத்​தரகர் மூலம் விற்​பனை செய்த தகவல் வெளி​யானது.

இதுதொடர்​பாக இடைத்​தரகர் ஆனந்​தன் மீது பள்​ளி​பாளை​யம் காவல் நிலை​யத்​தில் புகார் அளிக்​கப்​பட்​டு, போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர். இதற்​கிடை​யில், கிட்னி விற்​பனை விவ​காரம் தொடர்​பாக சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் உத்​தர​வின் பேரில் சிறப்பு விசா​ரணைக் குழு அமைக்​கப்​பட்​டுள்​ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/J05OaR2

Post a Comment

0 Comments