Crime

திருவாரூர்: கேரளா​வில் ரூ.3.24 கோடி வழிப்​பறி செய்​யப்​பட்ட வழக்​கில், மேலும் ஒரு பாஜக நிர்​வாகியை கேரள போலீ​ஸார் நேற்று கைது செய்​தனர். கேரள மாநிலம் ஆலப்​புழா மாவட்​டம் காயங்​குளம் என்ற இடத்​தில் கடந்த ஜூன் 13-ம் தேதி ரூ.3.24 கோடி ரொக்கத்தை நகைக் கடை அதிபர் ஒரு​வரிட​மிருந்து 12 பேர் கொண்ட கும்​பல் வழிப்​பறி செய்​து​விட்​டு, ஆரி​யங்காவு வழி​யாக தமிழகத்​துக்​குள் நுழைந்​து, திருப்​பூர் மாவட்​டத்​தில் தலைமறை​வாகி​விட்​டது.

இதுதொடர்​பாக, கேரள மாநிலம் கரியகுளக்​கரை போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​து, சிசிடிவி காட்​சிகளின் அடிப்​படை​யில் விசாரணை நடத்​தி, திருப்​பூர் மாவட்​டத்​தைச் சேர்ந்த சுபாஷ் சந்​திர​போஸ்​(32), திருக்​கு​மார்​(37) உட்பட 7 பேரை கைது செய்​தனர். மேலும், சிலரை போலீ​ஸார் தேடி வந்​தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/aW9Ls8K

Post a Comment

0 Comments