Crime

கோவை: கோவை குண்​டு​வெடிப்பு வழக்​கில் தேடப்​பட்டு வந்த டெய்​லர் ராஜா, 29 ஆண்​டு​களுக்கு பிறகு கைது செய்​யப்​பட்​டார். 1998-ல் கோவை​யில் நடந்த குண்​டு​வெடிப்​பு​களில் 58 பேர் கொல்​லப்​பட்​டனர். இது தொடர்​பாக சிபிசிஐடி சிறப்​புப் புல​னாய்​வுப் பிரிவு போலீ​ஸார் விசா​ரித்​தனர்.

இவ்​வழக்​கில் அல்​-உம்மா இயக்​கத்​தைச் சேர்ந்த பாஷா உட்பட 160-க்​கும் மேற்​பட்​டோர் கைது செய்​யப்​பட்​டு, சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர். மேலும், உக்​கடம் பிலால் காலனியைச் சேர்ந்த டெய்​லர் ராஜா (எ) ஷாஜ​கான் ஷேக் (48), முஜிபுர் ரஹ்​மான் ஆகியோரை போலீ​ஸார் தேடி வந்​தனர். இரு​வர் குறித்த தகவல்​களைத் தெரி​வித்​தால் ரூ.2 லட்​சம் லட்​சம் சன்​மானம் வழங்​கப்​படும் என போலீ​ஸார் தெரி​வித்​திருந்​தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/SQU3Z0r

Post a Comment

0 Comments