Crime

சென்னை: ​திரு​மலா பால் நிறு​வனத்​தில் ரூ.40 கோடி கையாடல் விவ​காரத்​தில் சிக்​கிய மேலா​ளர் தூக்​கில் தொங்​கிய நிலை​யில் சடல​மாக மீட்​கப்​பட்​டார். ஆந்​திர மாநிலம், கிருஷ்ணா மாவட்​டம் வையூர் கிராமத்​தைச் சேர்ந்​தவர் நவீன் பொலினேனி(37). திரு​மண​மாகி குடும்​பத்​துடன் சென்னை புழல் அடுத்த பிரிட்​டானியா நகர், முதல் தெரு​வில் உள்ள அடுக்​கு​மாடி குடி​யிருப்​பில் வசித்து வந்​தார். இவர் சென்​னை​யில் உள்ள திரு​மலா பால் நிறு​வனத்​தில் கடந்த மூன்​றரை ஆண்​டு​களாக கரு​வூல மேலா​ள​ராகப் பணி​யாற்றி வந்​தார்.

இந்​நிலை​யில், அண்​மை​யில் திரு​மலா பால் நிறு​வனம் அவர்​களது நிறுவன வரவு-செலவு கணக்​கு​களை சரி​பார்த்து தணிக்கை செய்​துள்​ளது. அப்​போது, ரூ.40 கோடி முறை​கேடு நடை​பெற்​றிருப்​பது தெரிய​வந்​தது. நவீன் அந்த பணத்தை கையாடல் செய்​த​தாக​வும், அந்த பணத்தை அவரது குடும்​பத்​தினர் மற்​றும் நண்​பரின் வங்கி கணக்​குக்கு மாற்றி மோசடி​யில் ஈடு​பட்​ட​தாக​வும் குற்​றம்சாட்டப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/yletMip

Post a Comment

0 Comments