Crime

திருநெல்வேலி: ஐ.டி. ஊழியர் கவின் செல்​வ கணேஷ் கொலை வழக்​கில் காவல் உதவி ஆய்​வாளர் சரவணன் கைது செய்யப்பட்டுள்​ளார். இந்த வழக்கு தொடர்​பாக சிபிசிஐடி போலீ​ஸார் விசா​ரணை​யைத் தொடங்​கி​யுள்​ளனர். தூத்​துக்​குடி மாவட்டம் ஆறு​முகமங்​கலம் பகு​தி​யைச் சேர்ந்த மென்​பொருள் பொறி​யாளர் கவின் செல்​வகணேஷ் கடந்த 27-ம் தேதி நெல்லையில் கொலை செய்​யப்​பட்​டார்.

இவர் காதலித்​த​தாக கூறப்​படும் பெண்​ணின் சகோ​தரர் சுர்​ஜித் என்​பவரை பாளை​யங்​கோட்டை போலீ​ஸார் கைது செய்​தனர். சுர்​ஜித்​தின் பெற்​றோ​ரான உதவி ஆய்​வாளர்​கள் சரவணன், கிருஷ்ணகு​மாரி ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்​யப்​பட்​டு, சஸ்பெண்ட் செய்​யப்பட்​டு உள்​ளனர். அவர்​கள் இரு​வரை​யும் கைது செய்​தால் மட்​டுமே கவின் செல்​வ கணேஷின் உடலை வாங்கி அடக்கம் செய்​வோம் என அவரது உறவினர்​கள் தொடர்ந்து போராட்​டம் நடத்தி வரு​கின்​றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/OXqf83u

Post a Comment

0 Comments