Crime

சென்னை: சென்னை விமான நிலை​யத்​துக்கு வெடிகுண்டு மிரட்​டல் இ-மெ​யில் வந்​த​தால் பரபரப்பு ஏற்​பட்​டது. சென்னை விமான நிலைய மேலா​ளர் அலு​வல​கத்​துக்கு நேற்று முன்​தினம் இரவு வெளி​நாட்​டிலிருந்து வந்த இ-மெயி​லில், சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்​டு​கள் வைக்​கப்​பட்​டுள்​ள​தாக​வும், எந்த நேரத்​தி​லும் வெடிக்​கும் என்று குறிப்​பிடப்​பட்​டிருந்​தது.

இதையடுத்​து, விமான நிலைய இயக்​குநருக்கு தகவல் தெரிவிக்​கப்​பட்​டு, அவசரகால பாது​காப்பு ஆலோ​சனைக் குழு கூட்​டம் நடத்​தப்​பட்​டது. தொடர்ந்​து, சென்னை விமான நிலை​யத்​தில் பாது​காப்பு சோதனை​கள் தீவிரப்​படுத்​தப்​பட்​டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/z8yJIb2

Post a Comment

0 Comments