Crime

சென்னை: கோவை குண்​டு​வெடிப்பு உள்​ளிட்ட வழக்​கு​களில் 30 ஆண்​டு​களாக தேடப்​பட்ட தீவிர​வாதி அபுபக்​கர் சித்​திக் வெடிகுண்​டு​கள் தயாரிக்க பாகிஸ்​தானில் பயிற்சி பெற்​றவர் என்ற பரபரப்பு தகவல்​கள் வெளி​யாகி உள்​ளது. நாகை மாவட்​டம், நாகூரைச் சேர்ந்த தீவிர​வாதி அபுபக்​கர் சித்​திக் கோவை தொடர் குண்​டு​வெடிப்​பு, இந்து அமைப்​பு​களின் தலை​வர்​கள் கொலை உட்பட பல்​வேறு தீவிரவாத செயல்​களில் ஈடு​பட்டு தலைமறை​வாக இருந்​தார்.

இந்​நிலை​யில், ‘ஆபரேஷன் அறம்’ என்​னும் சிறப்பு நடவடிக்கை மூலம் அபுபக்​கர் சித்​திக்கை ஆந்​திர மாநிலம் அன்​னமய மாவட்டம், கடப்பா அருகே பதுங்கி இருந்​த​போது தமிழக தீவிர​வாத தடுப்பு பிரிவு போலீ​ஸார் அண்​மை​யில் கைது செய்​தனர். இதே​போல் மற்​றொரு தீவிர​வா​தி​யான முகமது அலி என்ற ஷேக் மன்​சூரை​யும் கைது செய்​தனர். இவர்​கள் சென்னை அழைத்து வரப்​பட்டு கடந்த 1-ம் தேதி எழும்​பூர் நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்தி புழல் சிறை​யில் அடைத்​தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Rrbh6zX

Post a Comment

0 Comments