
சென்னை: பாரிமுனை பகுதியில் வசிப்பர் ஜெய்சங்கர் (49). இவருக்கு ஓட்டேரியைச் சேர்ந்த முத்துராமன் என்பவரது அறிமுகம் கிடைத்தது. அப்போது, முத்துராமன் தன்னால் தலைமைச் செயலகத்தில் அரசு வேலை வாங்கித் தர முடியும் என்று கூறியுள்ளார்.
இதை நம்பிய ஜெய்சங்கர் தனது உறவினர்கள் இருவருக்கு தலைமைச் செயலகத்தில் கம்யூட்டர் ஆபரேட்டர் வேலை வேண்டி, கடந்தாண்டு ஜனவரியில் ரூ.17.50 லட்சம் கொடுத்துள்ளார். முத்துராமன் அதே ஆண்டு பிப்ரவரியில் அரசு வேலைக்கான பணி நியமன உத்தரவை ஜெய்சங்கரிடம் கொடுத்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/GCSo9D3
0 Comments