Crime

திருவாரூர்: திரு​வாரூர் அரு​கே​யுள்ள காரி​யாங்​குடி அரசு தொடக்​கப் பள்​ளி​யில் கடந்த 11-ம் தேதி இரவு புகுந்த மர்ம நபர்​கள், அங்கிருந்த குடிநீர் பைப்​பு​களை உடைத்​தெறிந்​ததுடன், சமையலறை​யில் இருந்த பாத்​திரங்​கள், பொருட்​களை சேதப்​படுத்​தினர். பின்​னர், அங்​குள்ள குடிநீர் தொட்​டி​யில் மனிதக் கழிவை கலந்​து​விட்டு சென்​று​விட்​டனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் திரு​வாரூர் தாலுகா போலீ​ஸார் தனிப்​படை அமைத்​து, குற்​ற​வாளி​களைத் தேடி வந்​தனர். தொடர் விசாரணை​யில், அதே பகு​தி​யைச் சேர்ந்த வெல்​டிங் கடை உரிமையாளர் விஜய​ராஜ்(36), உதவி​யாளர் செந்​தில்​(38), பெயின்​டர் காளிதாஸ்​(25) ஆகியோர் இந்த ​செயலில் ஈடு​பட்​டது தெரிந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ASQFwJ5

Post a Comment

0 Comments