Crime

திருச்சி: ​திருச்சி விமான நிலை​யத்​தில் இருந்து மலேசி​யா​வுக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்​பிலான 420 நட்​சத்​திர ஆமை​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டன. இது தொடர்​பாக 2 பேர் கைது செய்​யப்​பட்​டனர். திருச்சி விமான நிலை​யத்​தில் இருந்து நேற்று அதிகாலை மலேசிய தலைநகர் கோலாலம்​பூருக்கு விமானத்​தில் செல்​ல​விருந்த பயணி​களின் உடைமை​களை வான் நுண்​ணறிவு பிரிவு சுங்​கத் துறை அதி​காரி​கள் சோதனை செய்​தனர்.

சென்​னையை சேர்ந்த 2 பயணி​களின் உடைமை​களை சோதனை செய்​த​போது, அவற்​றில் 420 இந்​திய நட்​சத்​திர ஆமை​கள் இருந்தது தெரிய​வந்​தது. இவ்​வகை ஆமை​கள் மலேசி​யா​வில் ரூ.25 ஆயிரத்​துக்கு விற்​பனை​யா​வ​தால், கடத்​தப்பட இருந்த ஆமை​களின் மதிப்பு ரூ.1 கோடி இருக்​கும் என்று கூறப்​படு​கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/AYaxjPC

Post a Comment

0 Comments