Crime

தூத்துக்குடி: சிபிஐ அதி​காரி என்று கூறி, ‘டிஜிட்​டல் அரெஸ்ட்’ செய்​திருப்​ப​தாக மிரட்டி மூதாட்​டி​யிடம் ரூ.50 லட்​சம் பறித்த ஆந்திராவைச் சேர்ந்த 3 பேர் கைது செய்​யப்​பட்​டனர். தூத்​துக்​குடி மாவட்​டத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒரு​வரை மர்ம நபர்​கள் வாட்ஸ்​அப் காலில் தொடர்​பு​ கொண்​டு, தாங்​கள் சிபிஐ அதி​காரிகள் என்று கூறி​யுள்​ளனர். பின்​னர், “உங்​கள் ஆதார் கார்டு அடிப்படை​யில் மும்​பை​யில் வங்​கிக் கணக்கு உள்​ளது.

அதில், மனித கடத்​தல் வழக்​கில் ரூ.2 கோடி பண பரி​மாற்றம் நடந்​துள்​ளது. இதுதொடர்பாக உங்​கள் மீது வழக்கு பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. உங்​களை கைது செய்​யாமல் இருக்க ரூ.50 லட்​சம் தரவேண்​டும்” என்​று வற்​புறுத்​தி​யுள்​ளனர். இதனால் அச்​சமடைந்த மூதாட்​டி, ரூ.50 லட்​சத்தை அவர்​கள் கூறிய வங்​கிக் கணக்​குக்கு பணப் பரி​மாற்​றம் செய்​துள்​ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ZDw1WbI

Post a Comment

0 Comments