Crime

சென்னை: ரூ.1,000 கோடி கடன் பெற்​றுத் தரு​வ​தாக கூறி ரூ.5 கோடி கமிஷ​னாக பெற்று மோசடி​யில் ஈடு​பட்ட வழக்​கில் நடிகர் பவர் ஸ்டார் சீனி​வாசனை டெல்லி போலீஸார் சென்னை வந்து கைது செய்து அழைத்​துச் சென்​றனர். டெல்​லியைச் சேர்ந்த தொழில​திபர் ஒரு​வர் கட்​டு​மான நிறு​வனம் நடத்தி வந்​தார்.

அவர், தனது நிறு​வனத்தை விரிவுபடுத்த ரூ.1,000 கோடி கடன் பெறு​வதற்கு முயற்​சித்​தார். இதையறிந்த நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், தான் கடன் வாங்​கித் தரு​வ​தாக அந்த தொழிலதிபரிடம் உறுதி அளித்​துள்​ளார். இதற்​கான கமிஷன் தொகை​யாக ரூ.10 கோடியை முதலில் தரும்​படி சீனி​வாசன் கேட்​டுக் கொண்​டுள்​ளார். ஆனால், அந்த தொழிலதிபர் சீனி​வாசனுக்கு முதல் கட்​ட​மாக ரூ.5 கோடியை வழங்​கிய​தாக கூறப்​படு​கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/qvkejYU

Post a Comment

0 Comments