Crime

திருவள்ளூர்: சிறு​வன் கடத்​தல் வழக்​கில் தலைமறை​வாகி உள்ள புரட்சி பாரதம் கட்சி தலை​வர் பூவை ஜெகன்​மூர்த்தி பிற மாநிலங்​களில் பதுங்​கி​யிருக்​கிறா​ரா? என, சிபிசிஐடி தனிப்​படை​யினர், சைபர் க்ரைம் போலீ​ஸாரின் உதவி​யுடன், தீவிர​மாக தேடி வரு​கின்​றனர்.

திரு​வள்​ளூர் மாவட்​டம், திரு​வாலங்​காடு அடுத்த களாம்​பாக்​கத்​தைச் சேர்ந்த தனுஷ், தேனி மாவட்​டத்​தைச் சேர்ந்த விஜயஸ்ரீ காதல் திருமண விவ​காரத்​தில் தனுஷின் 17 வயது தம்​பியை கடத்​தி​யது தொடர்​பாக புரட்சி பாரதம் கட்சி தலை​வரும், கே.​வி.குப்​பம் தொகுதி எம்​எல்​ஏவு​மான பூவை ஜெகன் மூர்த்​தி, போலீஸ் ஏடிஜிபி ஜெய​ராம் ஆகியோர் மீது குற்​றம் சாட்டப்பட்டுள்ளது. ஆகவே, முன் ஜாமீன் கோரி பூவை ஜெகன் மூர்த்தி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்த மனு மீதான விசா​ரணை​யின் போது, ஏடிஜிபியை கைது செய்ய நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/4X79fZk

Post a Comment

0 Comments