Crime

விருத்தாசலம்: பண்ருட்டி அருகே80 வயது மூதாட்டியைக் கடத்தி, பாலியல் கொடுமை செய்தவரை போலீஸார் சுட்டுப் பிடித்தனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த தராசு கிராமத்தைச் சேர்ந்தவர் கவுசல்யா (80). இவர், நேற்று முன்தினம் மாலையில் புலவனூர் சாலையில் நடைபயிற்சி நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது, அங்கு மது அருந்திக் கொண்டிருந்த இரு இளைஞர்கள் மூதாட்டியை சவுக்குத் தோப்புக்குள் இழுத்துச் சென்று, அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும், அவர் அணிந்திருந்த நகைகளையும் பறித்துக் கொண்டு தப்பியோடியுனர்.

சவுக்குத் தோப்பில் மயங்கிய நிலையில் இருந்த மூதாட்டியை அப்பகுதியினர் மீட்டு, கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். கடலூர் மாவட்ட எஸ்.பி. உத்தரவின்பேரில், ஆய்வாளர் வேலுமணி தலைமையில் தனிப்படை அமைத்து, விசாரணை நடத்தப்பட்டது. வழக்கில் தொடர்புடைய ஒருவர் காடாம்புலியூர் அருகேயுள்ள மேல்மாம்பட்டில் ஒரு முந்திரித் தோப்பில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Cky6vO5

Post a Comment

0 Comments