Crime

சேலம்: கெங்​கவல்லி அருகே மனைவி​யின் நடத்​தை​யில் சந்தேகப்​பட்ட ஆட்டோ ஓட்டுநர், மனைவி மற்றும் 3 குழந்தைகளை அரிவாளால் வெட்​டி​னார். இதில் பலத்த காயமடைந்த இரு குழந்தைகள் உயிரிழந்​தனர். காயமடைந்த மனைவி, மற்றொரு மகள் மற்றும் தற்கொலைக்கு முயன்ற ஆட்டோ ஓட்டுநர் ஆகியோர் மருத்​துவ​மனை​யில் சிகிச்சை பெற்று வருகின்​றனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த கெங்​கவல்லி அருகே​யுள்ள 74-கிருஷ்ணாபுரத்​தைச் சேர்ந்​தவர் அசோக்​கு​மார் (47). இவரது மனைவி தவமணி(38), குழந்தைகள் விஜய​தா​ரணி(13), அருள்​கு​மாரி(10), அருள்​பிர​காஷ்(5). சில ஆண்டு​களுக்கு முன்னர் நெய்​வேலிக்​குச் சென்ற அசோக்​கு​மார், அங்கு சகோதரருடன் தங்கி, ஆட்டோ ஓட்டி வந்தார். இந்நிலை​யில், நேற்று முன்​தினம் இரவு கெங்​கவல்லி வந்த அசோக்​கு​மார், வீட்​டில் இருந்தமனைவி, குழந்தைகளை அரிவாளால் வெட்​டி​னார். இதுகுறித்து தகவலறிந்த கெங்​கவல்லி போலீ​ஸார் அங்கு சென்​ற​போது, மகள் விஜய​தா​ரணி, மகன் அருள்​பிர​காஷ் ஆகியோர் இறந்து கிடந்​ததும், மனைவி தவமணி, மற்றொரு மகள் அருள்​கு​மாரி ஆகியோர் காயங்​களுடன் உயிருக்​குப் போராடிக் கொண்​டிருந்​ததும் தெரிய​வந்​தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wFib18Y

Post a Comment

0 Comments