Crime

கர்நாடக மாநிலம் மங்களூரு கூட்டுறவு வங்கியில் கொள்ளையடித்த, நெல்லையைச் சேர்ந்த 2 பேரை கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து 2 கிலோ தங்க நகைகள், ரூ.3 லட்சம் ரொக்கம், 2 துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.

கர்நாடக மாநிலம் மங்களூரு அருகேயுள்ள உல்லால் பகுதியில் செயல்பட்டு வரும் கோட்டேகார் கூட்டுறவு சங்க வங்கியில் கடந்த 17-ம் தேதி நுழைந்த முகமூடிக் கொள்ளையர்கள், துப்பாக்கி முனையில் ரூ.4 கோடி மதிப்பிலான நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். விசாரணையில், ராஜஸ்தானை சேர்ந்த 2 பேர், உ.பி.யைச் சேர்ந்த 2 பேர், மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் குடியிருந்து வரும் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர், மங்களூருவைச் சேர்ந்த இருவர் என 9 பேர் இதில் ஈடுபட்டது தெரியவந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/gc6Sx8h

Post a Comment

0 Comments