Crime

ஹைதராபாத்: புஷ்பா 2 சிறப்புக் காட்சி பார்க்க வந்தபோது நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவத்தை முன்வைத்து நடிகர் அல்லு அர்ஜுனின் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 6 பேருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. இந்நிலையில் ஜாமீன் பெற்றவர்களில் ஒருவர் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனால், அல்லு அர்ஜுன் கைது, அவர் வீடு மீது நடத்தப்பட்ட தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்களுக்கு அரசியல் பழிவாங்கல் காரணமா என்று சலசலக்கப்படுகிறது.

வீட்டின் மீது தாக்குதல்: அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில் உட்பட பலர் நடித்துள்ள படம் ‘புஷ்பா 2’. சுகுமார் இயக்கியுள்ள இந்தப் படம் தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் பான் இந்தியா படமாக கடந்த 5-ம் தேதி வெளியானது. வசூல் ரீதியாக இந்தப் படம் சாதனை படைத்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3BrQq1A

Post a Comment

0 Comments