Crime

புதுச்சேரி: மருத்துவப் படிப்புகளில் சேர போலி என்ஆர்ஐ சான்றிதழ் வழங்கிய 44 மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோருக்கு புதுச்சேரி போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

புதுவையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு சென்டாக் மூலம் கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதில் என்ஆர்ஐ (வெளிநாடு வாழ் இந்தியர்) ஒதுக்கீட்டில் 116 இடங்கள் உள்ளன. இதில் முதல், 2-ம் கலந்தாய்வில் 37 மாணவர்கள் சேர்ந்தனர். அப்போது என்ஆர்ஐ ஸ்பான்சர் ஒதுக்கீட்டில் போலிச் சான்றிதழ் அளித்து மாணவர்கள் சேர்வதாக புகார் எழுந்தது. இந்த நிலையில், மீதமுள்ள 79 இடங்களுக்கு 134 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இந்த மாணவர்களின் சான்றிதழ்களை சென்டாக் நிர்வாகம் சரிபார்த்தது. இதில் 44 பேரின் என்ஆர்ஐ ஸ்பான்சர் சான்றிதழ் போலியானது என தெரியவந்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Jd5cSnP

Post a Comment

0 Comments