
சென்னை: சென்னை திருவேற்காடு டிடிஎஸ் நகரைச் சேர்ந்தவர் சாந்தா (75). இவர், இதய நோயால் பாதிக்கப்பட்ட தனது கணவர் சின்னராஜுக்கு மாதாந்திர மாத்திரைகள் வாங்குவதற்காக நேற்று முன்தினம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வந்து, மாத்திரைகள் வழங்கும் இடம் அருகே நின்றுள்ளார்.
அப்போது அங்கு வந்த 40 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் மூதாட்டியிடம் பேச்சுக் கொடுத்தார். மத்திய அரசின்மக்கள் சேவை மையத்தில் இருந்து வந்திருக்கிறேன். பிரதமர் மோடி, வயதானவர்களுக்கு வரும் 13-ம்தேதி ரூ.10 லட்சம் (வங்கி கணக்கில் செலுத்துகிறார்) தருகிறார். அதனால் இந்த வெள்ளை பேப்பரில் கையெழுத்திடுங்கள் என கூறி, 4 இடங்களில் மூதாட்டியிடம் கையெழுத்து வாங்கியுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/whqzLpN
0 Comments