
சென்னை: சென்னை அயனாவரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் 27 வயதுடைய இளம் பெண் ஒருவர் கடந்த 4-ம் தேதி, அயனாவரம், கொன்னூர் நெடுஞ்சாலை, ஞானம்பாள் கார்டன் 1-வது தெரு சந்திப்பு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு நின்றிருந்த நபர் ஒருவர் அந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுவிட்டு தப்பி ஓடினார். இது குறித்து அயனாவரம் காவல் நிலையத்தில் அப்பெண் புகார் அளித்தார். விசாரணையில், அந்த நபர் அயனாவரம் காவல் நிலையத்தில் ரவுடி பட்டியலில் உள்ள மைக்கேல் என்ற மதன்குமார் ( 37 ) என்பது தெரியவந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wIKyMcU
0 Comments