
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்ற ஆருத்ரா தரிசனத்தின் போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவல் ஆய்வாளரைத் தாக்கிய திமுக மாநில நிர்வாகி, அவரது மனைவி, கோயில் ஊழியர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் ஆருத்ரா தரிசனம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அப்போது, விஐபி என்ற பெயரில் திமுக தலைமைச் செயற் குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், அவரது மனைவி சிவசங்கரி ஆகியோர் தரிசனம் செய்துள்ளனர். மூலவரை வழிபட்ட இவர்கள், உண்ணாமுலை அம்மன் சந்நிதியில் தரிசனம் செய்துள்ளனர். அப்போது கருவறை முன்பு நின்றுகொண்டு பல நிமிடங்கள் தரிசனம் செய்துள்ளனர். இதனால், அடுத்தடுத்த தரிசன மேடைகளில் நின்றிருந்த பக்தர்களால், அம்மனை வழிபட முடியவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/yqOQxNG
0 Comments