
சென்னை: சென்னை கொத்தவால் சாவடியில் ஆதியப்பா - கோவிந்தப்பா தெரு சந்திப்பில் வீரபத்திரசாமி கோயில் உள்ளது. நேற்று காலை8.45 மணியளவில் கோயிலுக்குள் நுழைந்த நபர் ஒருவர், தான் கொண்டு வந்த பெட்ரோல் குண்டைசாமி சிலையை நோக்கி வீசினார். அப்போது, அது வெடித்து சிதறியது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்தஅர்ச்சகர், பக்தர்கள் கோயிலுக்குள்இருந்து வெளியே ஓடி வந்தனர். இதையடுத்து அப்பகுதி மக்கள்பெட்ரோல் குண்டு வீசியவரை சுற்றி வளைத்து பிடித்தனர். உடனடியாக இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீஸார்,அந்த நபரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் பெட்ரோல் குண்டு வீசியவர், சென்னை பிராட்வே, ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த முரளி கிருஷ்ணன்(39) என்பது தெரியவந்தது. மேலும், அவர் போலீஸாரிடம் கூறும்போது, ``கடந்த 4 ஆண்டுகளாக இந்த கோயிலுக்கு தினமும்வந்து வழிபடுகிறேன். ஆனால், நான் நினைத்தது, வேண்டியது இதுவரை நடக்கவில்லை. சாமிஎனக்கு எதுவும் செய்யவில்லை. அந்த கோபத்திலும், விரக்தியிலும்தான் பெட்ரோல் குண்டு வீசினேன்’’என தெரிவித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/x6qLgkP
0 Comments