
கோவை: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியைச் சேர்ந்தவர் கருணாகரன். இவரது மகள் கீர்த்தனா (19). இவர், கோவை பொள்ளாச்சி சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு கீர்த்தனா வகுப்புக்குச் செல்லாமல் விடுதியிலேயே இருந்தார். அவருடன் தங்கியிருந்த 2 மாணவிகள் வகுப்புக்குச் சென்று விட்டு, மாலையில் விடுதிக்கு வந்து பார்த்த போது, மாணவி கீர்த்தனா அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து மதுக்கரை போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/j6f5YVm
0 Comments