Crime

மதுரை: நியோ மேக்ஸ் மோசடி வழக்கில் பெண் இயக்குநர் உட்பட மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நியோ-மேக்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் மதுரை உட்பட பல்வேறு ஊர்களில் கிளைகளை உருவாக்கி, கூடுதல் வட்டி,டெபாசிட் பணத்துக்கு இரட்டிப்பு தொகை முதலீடுகளை ஈர்த்தன. இதன்மூலம் பல கோடி ரூபாய் வசூலித்து,வீட்டு மனைகள், மருத்துவமனை, கல்லூரிகளை வாங்கி முறைகேடு செய்ததாக புகார்கள் எழுந்தன.

பாதிக்கப்பட்டோர் கொடுத்த புகார்களின் பேரில், மதுரை பொருளாதார குற்றத் தடுப்பு போலீஸார் நியோ மேக்ஸ் துணை நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர்கள் மதுரை கமலக்கண்ணன் பாலசுப் பிரமணியன், திருச்சி வீரசக்தி உள்ளிட்ட இயக்குநர்கள், முகவர்கள் என, சுமார் 90க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு வழக்குப் பதிவு செய்துள்ளனர். பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு எஸ்.பி. ஜோஸ் தங்கையா உத்தரவின்பேரில், சிறப்பு டிஎஸ்பி மணிஷா தலைமையிலான தனிப்படையினர் இந்த மோசடி தொடர்பாக தீவிரமாக விசாரிக்கின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/rZdMTtf

Post a Comment

0 Comments