Crime

குடியாத்தம்: குடியாத்தம் அருகே பட்டா தர ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) மற்றும் கிராம உதவியாளர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ரங்கசமுத்திரம் நடுகெட்டை கிராமத்தைச் சேர்ந்த போர்வெல் உரிமையாளர் மேகநாதன்(28). இவரது அனுபவத்தில் உள்ள பூர்வீக காலி இடத்துக்கு பட்டா கோரி 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பித்துள்ளார். இதுதொடர்பாக அக்ராவரம் விஏஓ ஜெயமுருகன் (39) என்பவரை சந்தித்துள்ளார். அப்போது, ரூ.10 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே பட்டா வழங்க முடியும் என ஜெயமுருகன் கூறியதாக தெரிகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/I27FLhC

Post a Comment

0 Comments