
திண்டுக்கல்: தனது சொந்த மகளை பலாத்காரம் செய்த வழக்கில், தந்தைக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், ராமையன்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் சசிக்குமார்(50). இவர், கடந்த 2011 மே 2-ம் தேதி தனது சொந்த மகளை பலாத்காரம் செய்ததாக, திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸில் குடும்பத்தினர் புகார் அளித்தனர். அதையடுத்து, போலீஸார் சசிக்குமார் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/d4g8ipv
0 Comments