
சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணியின் செல்போனை திருடியதாக, 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த சுபாஷ் என்ற பயணி கடந்த 25-ம் தேதி சொந்த ஊர் செல்வதற்காக ரயில் ஏற காத்திருந்தார்.
அப்போது, 3 சிறுவர்கள் அவரை தாக்கி அவரது செல்போனை பறித்துச் சென்றனர். இதுகுறித்து, சுபாஷ் அளித்த புகாரின் பேரில், எழும்பூர் இருப்புப் பாதை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, 17,16 மற்றும் 14 வயது மதிக்கத்தக்க 3 சிறுவர்களை கைது செய்தனர். அவர்கள் கெல்லீஸ் சிறார் பாதுகாப்பு இல்லத்தில் அடைக்கப்பட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/83SXlcy
0 Comments