
தூத்துக்குடி: இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.32 லட்சம் மதிப்பிலான அத்தியாவசிய மருந்து, மாத்திரைகளை க்யூ பிரிவு போலீஸார் தூத்துக்குடி அருகே நேற்று பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி க்யூ பிரிவு ஆய்வாளர் விஜயஅனிதா தலைமையிலான போலீஸார் நேற்று அதிகாலை ஆறுமுகநேரி- காயல்பட்டினம் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே வந்த 2 கார்களை மறித்து சோதனை நடத்தியதில், அவற்றில் முறையான ஆவணங்களின்றி, அத்தியாவசிய மருந்து, மாத்திரைகள் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/5xeHIsd
0 Comments