
விஜயவாடா: ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் பெண் சிசு விற்பனைக்கு என வாட்ஸ் அப்பில் விளம்பரம் செய்த கிராம மருத்துவரை (ஆர்எம்பி) போலீஸார் கைது செய்தனர்.
விஜயவாடாவை சேர்ந்தவர் அம்ருத ராவ். ஆர்எம்பி மருத்துவரான இவர், ஜி.கொண்டூரு பகுதியில் சில ஆண்டுகளான கிளினிக் நடத்தி வருகிறார். இந்நிலையில், இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்னர், பிறந்து 3 நாட்களே ஆன பெண் சிசு விற்பனை செய்யப்படும் என ஒரு வாட்ஸ் ஆப் குழுவில் படத்துடன் தகவலை பதிவு செய்தார். அக்குழந்தையின் விலை ரூ. 3 லட்சம் எனவும் அதில் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த தகவல் அப்பகுதி முழுவதும் பரவியது. மெல்ல இது விஜயவாடா போலீஸாருக்கு தெரியவந்தது. உடனே போலீஸார் அம்ருத ராவை கைது செய்து, அது யாருடைய குழந்தை? பெற்றோர் யார்? வறுமையில் குழந்தையை விற்க முன் வந்தார்களா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/SXpGMhn
0 Comments