Crime

விழுப்புரம் அருகே அண்ராய நல்லூர்‌ கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னராஜ் (60). இவரது நிலம் புதுப்பாளையம்‌ கிராமத்தில் உள்ளது. இவரது நிலத்துக்கு அருகில் அதே கிராமத்தைச் சேர்ந்த முருகன் (30) என்பவர் நிலம் உள்ளது. இவர்கள் இரு வருக்கும் இடையே நிலத்தகராறு ஏற்பட்டு, முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், சின்னராஜ் தனது நிலத்தில் இருந்த சவுக்கு கன்றுகளை பிடுங்கி எறிந்தது குறித்து முருகனிடம் கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கு வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த முருகன் சின்னராஜை தடியால் தாக்கியதில் பலத்த காயமடைந்த சின்னராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் போலீஸார் சின்னராஜ் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/L3fNOjR

Post a Comment

0 Comments