Crime

தி.மலை மாவட்டம் செய்யாறு அடுத்த தவசி கிராமத்தில் வசிப்பவர் அரசு பள்ளி ஆசிரியர் நாராயண மூர்த்தி(34). இவரது மனைவி சரவணபிரியா(26). இவர்களுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணத்துக்கு பிறகு சரவணபிரியாவிடம், கணவர் நாராயணமூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு வந்துள்ளனர். இதன் எதிரொலியாக கடந்த வாரம் ஏற்பட்ட தகராறில் சரவண பிரியாவை, அவர்கள் தாக்கி துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் செய்யாறு அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து நாராயணமூர்த்தியை கைது செய்தனர். மேலும், அவரது குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை தேடி வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3Ah2QaN

Post a Comment

0 Comments