Crime

அரக்கோணம்: அரக்கோணம் நகர காவல் துறையினர் பழனிபேட்டை மற்றும் இரட்டை கண் அமராவதி பகுதியில் நேற்று முன்தினம் இரவு ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது பழனிபேட்டை பகுதியைச் சேர்ந்த சத்யா (45) என்பவர் அரசு டாஸ்மாக் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருவது தெரியவந்தது. இதையடுத்து, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சத்யாவை கைது செய்தனர். அவரிடம் இருந்து 650 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3fEai63

Post a Comment

0 Comments