
புதுச்சேரியில் கிறிஸ்து மஸ், புத்தாண்டு கொண்டாட்டங்க ளுக்கு அரசு அனுமதி அளித்தநிலையில், பல்வேறு மாநிலங்க ளில் இருந்தும் சுற்றுலா பயணிகள்குவிந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு கடற்கரை சாலையில் உள்ளூர் வாசிகளும், சுற்றுலா பயணிகளும் குடும்ப குடும்பமாக வந்து பொழுதை கழித்தனர். இதனால் கடற்கரை சாலை திரு விழாக்கோலம் பூண்டது.
இந்நிலையில் புதுச்சேரி தலைமை செயலகம் எதிரே உள்ளகடற்கரை மணல் திட்டு பகுதியில்3 இளைஞர்கள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக வும், பெண்களுக்கு ஆபாச சைகைகளை காட்டி அநாகரிக செயலில் ஈடுபடுவதாகவும் பெரியகடை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. உடனே சப்-இன்ஸ் பெக்டர் சிவசங்கரன் மற்றும் போலீஸார் அங்கு விரைந்து சென் றனர். போலீஸாரை பார்த்ததும் அந்த இளைஞர்கள் தப்பியோட முயன்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3mBrqxd
0 Comments