Crime

சென்னை: ​முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வீட்​டுக்கு மீண்​டும் வெடிகுண்டு மிரட்​டல் விடுக்​கப்​பட்​டுள்​ளது. கடந்த சில நாட்​களாகவே முதல்​வர், துணை முதல்​வர், எதிர்க்​கட்​சித் தலை​வர், அமைச்​சர்​கள், ஆளுநர் மாளி​கை, நடிகர், நடிகைகள், அரசி​யல் தலை​வர்​கள், வெளி​நாட்டு தூதரகங்​கள் உள்​ளிட்ட பல்​வேறு இடங்​களுக்கு வெடிகுண்டு மிரட்​டல் விடுக்​கப்​பட்டு வரு​கிறது.

அந்த வகை​யில் நேற்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வீட்​டில் வெடிகுண்டு வைத்​துள்​ள​தாக டிஜிபி அலுவலகத்துக்கு மீண்​டும் இ-மெ​யில் வந்​தது. உடனே டிஜிபி அலு​வலக போலீ​ஸார் உயர் அதி​காரி​களுக்கு தெரி​வித்​தனர். இதையடுத்து தேனாம்​பேட்டை போலீ​ஸார் வெடிகுண்​டு​களை கண்​டறிந்து அகற்​றும் நிபுணர்​கள், மோப்ப நாய்​களு​டன் ஆழ்​வார்​பேட்​டை​யில் உள்ள முதல்​வர் வீட்​டுக்​குச் சென்று சோதனை நடத்​தினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/D3WUySR

Post a Comment

0 Comments