Crime

ஓசூர்: கெலமங்​கலம் அருகே தனி​யார் தொழிற்​சாலை பெண்​கள் விடுதி குளியல் அறை​யில் ரகசிய கேமரா பொருத்​திய விவ​காரத்​தில் கைதான வடமாநிலப் பெண், தவறான தகவலைக் கொடுத்து தனது ஆண் நண்​பரை தப்ப வைத்​தது விசா​ரணை​யில் தெரிய​வந்​தது. இதையடுத்​து, தலைமறை​வானவரை தேடி போலீ​ஸார் ஜார்க்​கண்ட் மாநிலத்​துக்கு விரைந்​துள்​ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்​டம் கெலமங்​கலம் அருகே நாகமங்​கலத்​தில் உள்ள தனி​யார் தொழிற்​சாலையில் பணிபுரி​யும் பெண் தொழிலா​ளர்​கள் தங்​கு​வதற்​காக லாளிக்​கல் பகு​தி​யில் விடுதி உள்​ளது. இங்கு 6 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் தங்​கி​யிருந்​தனர். இந்​நிலை​யில் கடந்த 1-ம் தேதி விடு​தி​யில் உள்ள ஒரு அறை​யின் குளியல் அறை​யில் ஒடி​சாவைச் சேர்ந்த நீலுகு​மாரி குப்​தா(22) என்ற பெண் தொழிலாளி ரகசிய கேமரா பொருத்​தி​யது தெரிய வந்​தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/T0tGBIw

Post a Comment

0 Comments