
சென்னை: ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ரவுடி கருக்கா வினோத்துக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து பூந்தமல்லி என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆளுநர் மாளிகை முன்பு 2023 அக்டோபர் 25-ம் தேதி அடுத்தடுத்து 2 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதுதொடர்பாக கிண்டி போலீஸார் ஜாமீனில் வெளியே வர முடியாதபடி 5 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிந்து சென்னை நந்தனத்தைச் சேர்ந்த ரவுடி வினோத் என்ற கருக்கா வினோத்தை (42) கைது செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/0tUKHYF
0 Comments