Crime

சென்னை: சென்னையில் உள்ள 20 வெளி​நாட்டு துணை தூதரகங்​களுக்​கும் நடிகர் அருண் விஜய் வீட்டுக்கும் நேற்று வெடிகுண்டு மிரட்​டல் விடுக்​கப்​பட்​டது. நாடு முழு​வதும் கடந்த சில மாதங்​களாக அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள், திரைப் பிரபலங்​கள், பள்​ளி​கள், விமான நிலை​யங்​கள், தூதரகங்​கள் உட்பட பலவற்​றுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்​டல் விடுக்​கப்​பட்டு வரு​கிறது. அந்த வகை​யில் டிஜிபி அலு​வலக இ-மெ​யில் முகவரிக்கு நேற்று காலை மின்​னஞ்​சல் ஒன்று வந்​தது.

அதில், சென்னை ஈக்​காட்​டுத்​தாங்​கலில் உள்ள நடிகர் அருண் விஜய் வீடு, நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள இலங்​கை, கிண்​டி​யில் உள்ள பிலிப்​பைன்​ஸ்,ராயப்​பேட்​டை​யில் உள்ள ஆஸ்​திரேலி​யா, நந்​தனத்​தில் உள்ள தாய்​லாந்து உள்​ளிட்ட நாடுகளின் 20 துணைத் தூதரகங்​களில் வெடிகுண்டு வைக்​கப்​பட்​டுள்​ளது என குறிப்​பிடப்​பட்​டிருந்​தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/T1bOMf7

Post a Comment

0 Comments